மெக்சிக்கோவில் தொடர் கொலைகளை செய்த சந்தேகநபரது வீட்டில் மனிதர்களது 3,700 எலும்புத்துண்டுகள்!!

மெக்சிகோ: மெக்சிகோவில் கிரேட்டர் மெக்சிகோ சிட்டி என்ற பகுதியில் கொலைக்குற்றவாளி என நம்பப்படும் சந்தேகநபரது வீட்டில்  போலீசார்  3700 க்கும் அதிகமான எலும்புகளின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர். இவை சுமார் 17 நபர்களுடைய சடலங்களாக இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

அதாவது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு நபரின் கொலை வழக்கில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆண்ட்ரேஸ் என்பவரின் வீட்டில் பல ஆதாரங்கள் சிக்கியது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 1991ஆம் வருடத்திலிருந்து பெண்களைக் கொன்று சடலங்களை துண்டாக்கி, தன் வீட்டிலேயே புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் செல்போன்கள், கைப்பைகள், சாவி மற்றும் தங்க நகைகள் போன்ற பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் காணாமல் போன 6 நபர்களுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அவரது வீட்டின் பல இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. எனவே மேலும் பல ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here