கோலாலம்பூர் பாசார் போரோங்கில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு!

கோலாலம்பூர்( ஜூன் 16) : கோலாலம்பூர் பாசார் போரோங்கில் கடந்த திங்கட்கிழமை மாலை இரு குழுக்களுக்கிடையில் அடிதடி நடந்த காணொளி முகநூலில் வைரலாகியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. காய்கறிக் கூடையை தள்ளிச் செல்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இரண்டு தரப்பினருக்கிடயில் அடிதடி ஏற்பட்டது.

இது தொடர்பான மூன்று வீடியோ பதிவுகள் முகநூலில் இடம்பெற்றுள்ளதை போலீஸ் அறிந்திருக்கிறது என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பே எங் லாய் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள் சிலர் கூச்சலிட்டபடி ஒருவர் மற்றவரைப் பிடித்துத் தள்ளும் காட்சிகள் அந்த வீடியோ பதிவில் இடம்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் பற்றி புகார் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால், அதற்குள் சண்டை ஓய்ந்துவிட்டது.

ஏ.சி.பி பே எங் லாய்

இந்தச் சம்பவத்தில் ஆயுதம் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. இந்த வழக்கு இப்போது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 160 ன் கீழ், அதாவது ஒரு பொது இடத்தில் சண்டையிடுவதற்கும், தொற்று நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் (நோய்த்தொற்றின் உள்ளூர் பகுதிகளில் நடவடிக்கைகள்) ஒழுங்குமுறைகள் 2021 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட நபர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவார்கள்” என்றும் “பொது மக்கள் எப்போதும் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் பொது அமைதி மற்றும் சட்ட ஒழுங்கைக் குலைக்கும் விஷயங்களைச் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுவார்கள்” என்றும் பெ எங் லாய் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல்களை தெரிவிக்க விரும்புபவர்கள் செந்துல் மாவட்ட காவல்துறை தலைமையகம் (ஐபிடி) செயல்பாட்டு அறையை 03-40482206 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here