பெட்டாலிங் ஜெயா (ஜூன் 16): மலேசியாவுக்கு சீனா 500,000 கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
சீனாவின் மாநில கவுன்சிலர் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோரிடமிருந்து வந்த செய்தியில் , சீனா மலேசியாவுக்கு இப்பங்களிப்பை செய்ய ஆவலாக உள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுதீன் ஹுசைன் தெரிவித்தார்.
“மலேசிய அரசாங்கத்தின் சார்பாக, இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு எங்களுடய முயற்சிகளுக்கு பெரிதும் உதவும் இந்த தாராளமான பங்களிப்புக்காக மேன்மை தங்கிய அமைச்சர் வாங் யி க்கும் மற்றும் சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
“சீனாவினால் இதுவரை வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவை மலேசியா மிகவும் பாராட்டுகிறது என்றும் இந்த இக்கட்டான நேரத்தில் சீனாவின் பங்களிப்பு தடுப்பூசி செயல்முறைக்கு ஊக்கமளிக்கும் மற்றும் மலேசியாவின் தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தினை தொடர்ந்து செய்வதற்க்கும் உதவும் என்றும் கூறினார்.
இந்த பங்களிப்புகளூடாக எங்கள் இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள் நெருக்கமான மற்றும் நட்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் மலேசியா நம்புகிறது,” என்று அவர் இன்று (ஜூன் 16) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.