இடைவெளி குறைக்கும் இனிய சந்திப்பாகுமா?

ஜோபைடன்-விளாடிமிர் புடின் பங்கேற்கும் மாநாடு.. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கவுள்ள உச்சி மாநாடு பரவலாக பேசப்படும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

உலக நாடுகள் ஆவலோடு  எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பை முதன்மையாக வைத்து  பங்கேற்கும் உச்சி மாநாடானது இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடக்கவுள்ளது.

இதில் உக்ரைன், ரஷ்யாவின் பக்கத்து நாடுகளின் அரசியல் நிலை, அணு ஆயுதங்கள் குறைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளார்கள்.

ரஷ்ய நாட்டில் நிகழும் மனித உரிமை மீறல்கள், சிறை தண்டனை, எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான வன்முறைகள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. 

இதுமட்டுமல்லாமல் சைபர் குற்றங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள், கொரோனோவிற்கு எதிரான நடைமுறைகள், பருவநிலை, ஆர்க்டிக் போன்றவை பற்றியும் விவாதிக்க இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாநாடானது, மூன்று பிரிவுகளாக, அதிகாரிகள் குழுவினர் தனியாகவும், தலைவர்கள் இருவரும் தனியாகவும் ஆலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, சிறை தண்டனை அனுபவிப்பது தொடர்பில் அமெரிக்கா அதிபர் கேள்வி எழுப்பலாம் என்று கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here