அவசர கால சட்டத்தின் கீழ் பிரதமரின் ஆலோசனையின்றி நாடாளுமன்றம் கூடலாம்; காலிட் சமாத் கருத்து

பெட்டாலிங் ஜெயா: அவசர கால சட்டத்தின் கீழ் பிரதமரின் ஆலோசனையின்றி பொருத்தமான தேதியில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாமன்னருக்கு அதிகாரம் உள்ளது என்று காலிட் சமாத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் Tamat Darurat  குழுவின் தலைவர் கட்டளைச் சட்டத்தின் 14 மற்றும் 15 பிரிவுகளை மேற்கோள் காட்டி, நாடாளுமன்றத்தை மீண்டும் தொடங்க பொருத்தமான தேதியில் பிரதமர் அவருக்கு ஆலோசனை வழங்க காத்திருக்க தேவையில்லை என்று கூறினார்.

இதன் மூலம், அவசரநிலை இன்னும் நடைமுறையில் உள்ள நிலையில், ஜூலை மாதம் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு மாமன்னரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மட் ஷா நேற்று நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். ஏனெனில் இது அவசரகால கட்டளை மற்றும் அரசாங்கத்தின் தேசிய மீட்பு திட்டம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை இது அனுமதிக்கும் என்றார்.

நேற்று சந்தித்த மலாய் ஆட்சியாளர்கள், ஆகஸ்ட் 1 க்குப் பிறகு நாடு அவசரகால நிலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மாநில சட்டசபைகளும் விரைவில் கூடியிருக்க வேண்டும் என்றும் விரும்பினர்.

தற்போதைய அரசாங்கம் தொற்றுநோயையும் பொருளாதாரத்தையும் நிர்வகிக்கத் தவறிவிட்டது என்பதனை மாமன்னர் மற்றும் ஆட்சியாளர்களின்  நிலைப்பாடு குறித்து நன்றி தெரிவித்து கொள்வதாக காலிட் தெரிவித்தார். அமானா தகவல் தொடர்பு இயக்குனர் தொற்றுநோயை சமாளிப்பதற்கும் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் சிறந்த வழி பற்றி விவாதிக்க நாடாளுமன்றம் சிறந்த தளம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here