குடும்பத்தையே ‘கொலை செய்த கொடூர இளைஞர்!

வேலைக்கு போகச் சொன்னது குற்றமாம்! 

அமெரிக்காவின் ஐயோவா பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் ஜாக்சேன்(20). இவர் தன்னுடைய தந்தை ஜான் ஜாக்சேன்(61), தாய் மெலிசா ஜாக்சேன்(68), தங்கை சப்ரினா ஜாக்சேன்(19) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் குடும்பத்திற்குள் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு திடீரென இந்த வீட்டிலிருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடந்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டிற்கு மூன்று துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து இருப்பதை கண்டனர். மேலும் காலில் காயத்துடன் அலெக்சாண்டர் ஜாக்சேன் இருந்ததை கண்டு அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினர்.

பின்னர் காவல்துறையினர் ஜாக்சேன் இடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் முதலில் அவர்கள் வீட்டிற்கு ஒரு அடையாளம் தெரியாத நபர் நுழைந்து வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து தாக்கியதாக கூறினார். மேலும் அதை தடுக்க முயன்ற போது தான் அவருக்கு காயம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். அவரின் தகவல் ஏற்ப காவல்துறையினர் அங்கு இருந்த துப்பாக்கி வீட்டை சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் வீட்டிற்குள் யாரும் வந்ததற்கான அடையாளம், தடையங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு அலெக்சாண்டர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவரை மீண்டும் சரிமாறியாக கேள்விகளை எழுப்பி விசாரித்துள்ளனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இறுதியில் அவர் செய்த தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.

அதன்படி அவர், “எனது தந்தைக்கும் எனக்கும் நீண்ட நாட்களாக சண்டை இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக அது மிகவும் தீவிரம் அடைந்தது. என்னை வேலை தேடுமாறு அவர் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார். நான் அதை மறுத்து வந்தேன். இந்தச் சூழலில் வேலையில் சேரவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறும் படி அவர் கூறினார்” எனத் தெரிவித்தார். இதன் காரணமாக அவர்கள் மூன்று பேரையும் துப்பாக்கியை எடுத்து சுட்டு கொன்றதாக விசாரணையில் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். இவருடைய குற்றம் உறுதியாகும் பட்சத்தில் இவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை,தாய்,தங்கை ஆகியவர்களை கொலை செய்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் வேலைக்கு போகச் சொன்ன காரணத்திற்காக என்பது தான் அதை விட அதிர்ச்சியான தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here