ரஷ்ய அதிபர் புதினுக்கு 23 கேரட் தங்கத்தினாலான சன் கிளாஸை அன்பளிப்பாக கொடுத்த ஜோ பைடன்

ரஷ்ய நாட்டு அதிபர் புதினுக்கு 23 கேரட் தங்கத்தினாலான Randolph பிராண்ட் சன் கிளாஸை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்  அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அண்மையில் இருநாட்டு தலைவர்களும் ஜெனிவாவில் சந்தித்துக் கொண்டனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு 60 நிமிடங்கள் வரை நடந்தது.

இந்த சந்திப்பில் இருவரும் சில சிக்கல்களை பேசி தீர்த்துக் கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த சந்திப்பின் போதுதான் அமெரிக்க அதிபர் பைடன், அதிபர் புதினுக்கு 23 கேரட் தங்கத்தினாலான சன் கிளாஸை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

‘Concorde’ ஸ்டைல் கண்ணாடியை அவர் புதினுக்கு பரிசளித்துள்ளார். இந்த வகை கண்ணாடியை 1978 முதல் அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வருகிறது. மாதத்திற்கு சுமார் 25000 கண்ணாடிகளை ராணுவத்திற்கு சப்ளை செய்து வருகிறது இந்த கண்ணாடிகளை உற்பத்தி செய்து வரும் நிறுவனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here