ஜார்ஜ் டவுன் (ஜூன் 20) : பாயன் லெபாஸில் உள்ள வில்லா ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் ( Villa Emas Condominium) இன்று (ஜூன் 20) மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கார்கள் மற்றும் ஆறு மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாம்பலாயின.
மதியம் 3.06 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கு அழைப்புக் கிடைத்ததாக, பாயன் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை செயல்பாட்டு அதிகாரி அஸ்ருல் கைரி அபுபாக்கர் தெரிவித்தார்.
“ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பின் கார் நிறுத்துமிடத்தில் தீப்பரவல் ஏற்பட்டது என்றும் தீப்பிடித்து எரிந்த 2 கார்கள் மற்றும் 6 மோட்டார் வண்டிகள் என அனைத்து வாகனங்களும் கிட்டத்தட்ட முற்றிலும் தீயில் மூழ்கின என்றும் அவர் கூறினார்.
மேலும் “நாங்கள் ஜாலான் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரிடமிருந்து உதவி பெற்றோம், பிற்பகல் 3.22 மணிக்கு தீயைக் கட்டுப்படுத்த முடிந்தது, ”என்றும் அஸ்ருல் கைரி கூறினார்.
மேலும் உயிர் சேதங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.