போலந்து அனைத்துலக புத்தாக்கப் போட்டியில் பிரதமதேஸ்வரர் மீண்டும் சாதனை.

மாசாய்,ஜுன் 27-

முன்னாள் மாசாய் தமிழ்ப்பள்ளி மாணவன் பிரதமதேஸ்வரர் தொடர்ந்து இரண்டாம் முறையாக போலந்து நாட்டின் அனைத்துலக புத்தாக்கப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழ்ப்பள்ளிகளின்
தரத்தை உயர்த்தி காட்டியிருக்கிறார்.

கடந்த ஜுன் 22-24ல் அறிவிக்கப்பட்ட போட்டி முடிவுகளில் கோத்தா புத்ரி 2 இடைநிலைப் பள்ளியில் ஐந்தாம் படிவம்  படிக்கும் பிரதமதேஸ்வரர் மற்றும் கிஷன், பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அவருடைய தம்பியுடன்   இணைந்து    ஸ்மார்ட் இயக்க கட்டுப்பாட்டு அட்டை (SMCC) சாதனம் உருவாக்கி தங்க விருது பெற்றனர்.

தொற்றுநோய்கள் காலத்தின் போது  பொது மக்களை கண்காணிக்கும் எளிதான  முறை வெளியே செல்லும்போது  உள்நுழைய விவேக தொலைபேசியைப்  பயன்படுத்த முடியாதவர்கள் என்ன செய்வார்கள் ?

  (ஸ்மார்ட் இயக்கம் கட்டுப்பாட்டு அட்டை) எஸ்.எம்.சி.சி உங்களுக்கு உதவும். RFID கார்டுகளைப் பயன்படுத்தி, குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வெளியே செல்லும் போது அவர்களின் வெப்பநிலை மற்றும் இருப்பிடத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் பதிவுசெய்ய பயன்படுத்தக்கூடிய ஒரு எளிய அமைப்பு. 

இணைய வழியாக நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனை புரிந்து வருகின்றனர்.

கணினி அறிவாற்றல், திறன்பேசி நுணுக்க இயக்கம், மின்னியல் சாதனங்கள் செயல்முறை, இவற்றை இணைத்து புத்தாக்க சாதனங்கள் உருவாக்கும் ஆற்றல் கொண்டுள்ளனர்.

அசாத்திய திறமை கொண்ட இளம் வயது  மலேசிய மண்ணின் மைந்தர்கள் தங்களின் தொழில் நுட்ப திறமைகளின் ஆற்றலை வெளிப்படுத்தி, உருவாக்குகின்ற  அறிவியல் தொழில் நுட்ப சாதனங்கள் உலக அரங்கில் மேன்மையான அங்கீகாரம் பெற்று, பல்வேறு தங்கப்பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர்.

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் மாசாய், பாண்டார் பாரு ஸ்ரீஆலாம் பகுதியை சேர்ந்த 17 வயது கோத்தா புத்ரி 2, இடைநிலைப்பள்ளி மாணவர் பிரதமேஷ்வரர், தன்னுடைய முதல் கண்டுபிடிப்பை 2018-ம் ஆண்டு மலேசிய யுனிவர்சிட்டி டெக்னோலோஜி தொழில் நுட்ப கண்காட்சியில்  பார்வையற்றவர்களுக்கான ராடார் கருவி  அறிமுகப் படுத்தியுள்ளார்.

பார்வையற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில், கையுறையை தொழில் நுட்ப சாதனமாக உருமாற்றி அதில் ஏற்படும் ஒலி அலைகள் மூலம் அருகில் இருக்கும் பொருட்களை கண்டு பிடிக்க முடியும். பார்வையற்றவர்களுக்கு இது மிக பயனுள்ளதாக அமைகின்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து, ஆர்வமும் ஈடுபாடும் உந்த, மாணவர் பிரதமேஷ்வரர் மேலும் பல கண்டுபிடிப்புக்களை உருவாக்கும் எண்ணத்துடன், இந்த துறையில் ஈடுபாடுள்ளதாக தமது சகோதரி ஸ்வரணாவாஹிணி கூறினார். 11-வயது உறவினர் கிஷேன் கூட்டு முயற்சியில் 2019-ம் ஆண்டில் இந்தியாவின் ஹைதரபாத் நகரில் நடைபெற்ற  அறிவியல் புத்தாக்க கண்காட்சியில் கணினி  சாதனம் உருவாக்கி, தங்க விருதும், இரண்டு விசேஷ விருதுகளும்,பெற்றனர்.

தைவான் நகரில்   அறிவியல் புத்தாக்க கண்காட்சியில் தங்க விருதும், நான்கு விசேஷ விருதுகளும் வென்றுள்ளனர்.

ஜூலை 8, 2020-ல் அறிவிக்கபட்ட போட்டி முடிவுகளில்,மண்ணின் மைந்தர்  பிரதமேஷ்வரர் உருவாக்கிய படைப்பான  பாதுகாப்பு  சாதனம் தங்க விருது பெற்றுள்ளது.

தொலை நோக்கு சிந்தனையும் அறிவாற்றலும் கொண்ட பிரதமேஷ்வரரின்  தாயார் ஜெயசித்ரா, தமது பிள்ளைகளின் திறமைகளை ஊக்குவிப்பதில் உறுதுணையாக விளங்குகிறார். தமது பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆழ்ந்த பற்றுதல் கொண்டுள்ள பெற்றோர் ஜெயசித்ரா போன்றோர் தமது பிள்ளைகளுக்கு நம்பிக்கையும் துணிவும் ஊட்டுகின்றனர்.

தனித்து வாழும் தாய்மாரான திருமதி ஜெயசித்ராவின் முன்னோக்கிய மனோதிடம், அதிநவீன புத்தாக்க சாதனங்களை விட மேன்மையானது, உயர்வானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here