தகுதியின் அடிப்படையிலேயே மருத்துவ அதிகாரிகள் நியமனம்; இனம் மதம் சார்ந்து அல்ல- அமைச்சு விளக்கம்

பெட்டாலிங் ஜெயா: பூமிபுத்ரா மருத்துவ பட்டதாரிகளுக்கு அமைச்சில் நிரந்தர பதவிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம் அதன் நிலைப்பாடு அல்ல. ஆனால் அவை இரண்டு மருத்துவ குழுக்களின் நிலைப்பாடு என்று சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவின் அறிக்கை ஜூன் 23 அன்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அமைச்சக பொதுச்செயலாளர் முகமட் ஷபிக் அப்துல்லா தெரிவித்தார். அறிக்கையின் முதல் பத்தியில் இந்த மருத்துவ சங்கங்கள் முன்வைத்த திட்டத்தை மேற்கோள் காட்டியதாக அவர் கூறினார். அமைச்சகம் எப்போதுமே மருத்துவ அதிகாரிகளை தகுதி மற்றும் அவர்களின் படிப்பின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நியமித்திருப்பதாக அவர் கூறினார். இரு சங்கங்களும் எழுப்பிய பிரச்சினை குறித்து சுகாதார அமைச்சின் விளக்கம் ஊடக அறிக்கையின் இரண்டாவது பத்தியில் சொல்லப்பட்டிருந்தது.

இந்த விளக்கம் மருத்துவ அமைச்சர்களின் நிரந்தர நியமனங்களை நிர்வகிப்பதில் சுகாதார அமைச்சின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டின் எந்தவொரு குழப்பத்தையும் அல்லது தவறான விளக்கத்தையும் சரிசெய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று, மலேசிய மருத்துவ சங்கம் (எம்.எம்.ஏ) Persatuan Perubatan Kesihatan Awam Malaysia மற்றும் மலேசிய இஸ்லாமிய மருத்துவர்கள் சங்கம் முன்வைத்த திட்டத்தை விமர்சித்தது. இன அல்லது மத அடிப்படையில்  மருத்துவ அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்று கூறியது.

எம்.எம்.ஏ தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் முனியாண்டி, புதிய பட்டதாரிகளுக்கு, குறிப்பாக பூமிபுத்ராக்களிடமிருந்து நிரந்தர பதவிகளை வழங்க வேண்டும் என்ற பரிந்துரை மலேசிய மருத்துவர்களின் முயற்சிகளுக்கு தலைகுனிவு என்று கூறியிருந்தார்.

ஒப்பந்த மருத்துவர்களுக்கான மதிப்பீட்டு அளவுகோல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இது பாரபட்சமான நடைமுறைகள் குறித்த  சந்தேகத்தையும் தீர்க்கும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here