கொரோனாவின் கோர தாண்டவம் – மகனை இழந்த 2 வாரத்தில் கணவரையும் இழந்த நடிகை கவிதா

கவிதாவின் மகன் சாய் ரூப், கணவர் தசரத ராஜ் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். 2 வாரங்களுக்கு முன்பு சிகிச்சை பலனில்லாமல் சாய் ரூப் மரணமடைந்தார். மகனை இழந்த இரண்டே வாரத்தில் கொரோனா தொற்றுக்கு கணவரையும் இழந்துள்ளார் நடிகை கவிதா.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. திரையுலகினரும் இதன் தாக்கத்திலிருந்து தப்பவில்லை. இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் கொரோனா தொற்றுக்கு மகனை இழந்தார் பிரபல நடிகை கவிதா. அதோடு அவரது கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரும் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

கவிதாவின் மகன் சாய் ரூப், கணவர் தசரத ராஜ் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். 2 வாரங்களுக்கு முன்பு சிகிச்சை பலனில்லாமல் சாய் ரூப் மரணமடைந்தார். இருப்பினும் கணவர் எப்படியும் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார் கவிதா. ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ஒரே நேரத்தில் மகனையும், கணவரையும் இழந்த கவிதாவுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவித்து வருகிறார்கள் திரைப்பிரபலங்கள்.

கவிதா ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். தமிழில் 1976-ல் வெளியான ‘ஓ மஞ்சு’  திரைப்படத்தில் அறிமுகமானவர் நாயகி முதற்கொண்டு அம்மா கதாபாத்திரம் வரை பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். தற்போது ஸீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ என்றென்றும் புன்னகை’ தொடரிலும் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here