பிழையை கண்டுபிடித்த இந்திய பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசு!!

மைக்ரோசாஃப்ட்  நிறுவனம் வழங்கியது

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிழையை கண்டுபிடித்து தெரிவித்த இந்தியாவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசுத்தொகையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

டெல்லியை சேர்ந்த அதிதீ சிங் (20) என்ற இளம்பெண் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மேப் மை இந்தியாவின் பிழையை கண்டறிந்து தெரிவித்ததன் காரணமாக கல்வி ஆவணங்கள் இல்லாமல் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் இருக்கும் பிழையை கண்டறிந்து அதிதீ சிங் தெரிவித்தார். அதற்கு பேஸ்புக் நிறுவனம் இவருக்கு ரூ.5.5 லட்சம் பரிசு வழங்கியது.

இந்நிலையில் அதிதீ சிங் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிழையை கண்டுபிடித்துள்ளார் . அந்நிறுவனத்தின் ஆர் . இ . சி . என்ற தொலைக்குறியீடு செயல்படுத்துதல் பிரிவின் பிழையை கண்டறிந்து அந்நிறுவனத்திடம் தெரிவித்தார்.

யாரும் கண்டுபிடிக்காத அந்த பிழையைக் கண்டுபிடித்து கூறியதால், அப்பெண்ணை பாராட்டும் விதமாக மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் முப்பதாயிரம் டாலர் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 22 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளம்பெண் அதிதீ சிங்குக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here