நவம்பர் 4-ஆம் தேதி திரையீடு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படம் நவம்பர 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதிபாபு, யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’. குடும்ப சென்டிமென்ட் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி வருகிறது.
மேலும் ரஜினியின் உடல்நல பாதிப்பு என தடைப்பட்டு தடைப்பட்டு நடந்து வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இப்பட பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார் ரஜினி.
தற்பொழுது வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் திரைக்கு வருவதாக ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர் தயாரிப்பு நிறுவனத்தார் சன் பிக்சர்ஸ். அந்த போஸ்டரில் ரஜினி திரும்பி இருப்பது போன்று உள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.