திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதல் ஏன்?
பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான CSAV Tyndall என்ற சரக்கு கப்பல் மீது இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . இந்த கப்பல் ஜெட்டா துறைமுகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபல் அலி வழியே செல்லும் போது தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் கப்பலுக்கும் கப்பலில் பயணம் செய்தவர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஈரான் – இஸ்ரேல் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் மத்திய கிழக்குப் பகுதியில் ஒருவருக்கொருவர் கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால் பிரிட்டன் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது இந்த சரக்கு கப்பல் இஸ்ரேல் நிறுவனத்திற்கு சொந்தமானது என தவறாக நினைத்து ஈரான் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் இந்த சரக்கு கப்பல் மீது நடந்த தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.