ஜோ பைடன் நிர்வாக அசத்தல் முடிவு!
மக்களின் வீடுகளுக்கேச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஜோ பைடன் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறார்.
லை 4 ஆம் தேதிக்குள் 70 சதவீத அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 67 சதவீதத்தினர் மட்டுமே குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதனால், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேலும் அதிகப்படுத்த அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். தான் அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பு 30 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை 16 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பைடன் தெரிவித்துள்ளனர்.
16 கோடி என்ற இலக்கை இந்த வார இறுதிக்குள் எட்டுவோம் என தெரிவித்த அவர், அதற்காக ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் தனது நிர்வாகம் ஈடுபடும் எனவும் கூறியுள்ளார்.