தமிழறிஞர் சத்யசீலன் மறைவு

திருச்சி:
மூத்த தமிழறிஞரும், இலக்கிய சொற்பொழிவாளருளமான முனைவர் சோ.சத்தியசீலன் வயது மூப்பின் காரணமாகக் காலமானார்.
பெரம்பலூரைப் பூர்வீகமாகக் கொண்ட முனைவர் சோ.சத்தியசீலன் (88), கடந்த சில ஆண்டுகளாக திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், வயது மூப்பு , உடல்நலக் குறைவு காரணமாக, நேற்று இரவு (ஜூலை 9) சோ.சத்தியசீலன் காலமானார். பள்ளி , கல்லூரி முதல்வர்  பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழு தலைவர், ஆட்சிக்குழு உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.நேருவழி நேர்வழி, அழைக்கிறது அமெரிக்கா, திருக்குறள் சிந்தனை முழக்கம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.
சொல்லின் செல்வர், நாவுக்கரசர் உள்ளிட்ட பட்டங்களும் இவருக்கு உண்டு. இவரது உடல் இன்று (ஜூலை 10) மாலை திருச்சி, சேதுராமன் பிள்ளை காலனியிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, உய்யக்கொண்டான் கரையிலுள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்துக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
பலர் அஞ்சலி இவரது உடலுக்கு திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா, திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, புலவர் திருவாரூர் சண்முகவடிவேல், கவிஞர் மரபின் மைந்தன் ம.முத்தையா, திருச்சி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிகள் பிரிவுத் தலைவர் நடராஜன், திருச்சி நகைச்சுவை மன்றச் செயலாளர் சிவகுருநாதன், உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here