ஈப்போவில் வங்கிகள் முன்புறத்தில் பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

மக்கள் ஓசை செய்தியாளர், ஈப்போ, ஜூலை 12:

கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக MCO அமலாக்கம் செய்யப்பட்டுள்ளதால் வேலை இல்லாப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அதன் விளைவாக இங்குள்ள வங்கிகள் முன் புறத்தில் அல்லது வாசலில் பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முன்பு ஆங்காங்கே ஏதோ ஒருவர் பிச்சையெடுப்பதை காண முடித்தது. ஆனால், இன்று ஈப்போ பாடாங் சி ஐ எம் பி வங்கி, சிலிபின் மே பேங்க் வங்கி முன்புறத்திலும் மற்ற வங்கிகளைவிட அதிகமானோர் பிச்சை எடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு பிச்சை எடுப்பர்கள் பல இனத்தவர்களைச் சேர்ந்தவர்கள். இம்மாதிரியான சம்பவங்களை முன்பு காண்பது அரிது. ஆனால், இப்போது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசாங்கம் இவர்களது பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணவுள்ளது என்பதுதான் அனைவரின் கேள்வியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here