கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முற்பதிவுகள் எதுவுமின்றி மருத்துவமனையில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15:

இதுவரை கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முற்பதிவு இன்றி தாமாகவே தனியார் கிளினிக்குகள் அல்லது தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று தங்களுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றது.

இந்த முயற்சி முதலில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில்  அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் படிப்படியாக மற்றைய மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

“தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் முன் பதிவு எதுவும் இன்றி தடுப்பூசி செலுத்த முடியும்.

“நாங்கள் இதை முடிவு செய்ததற்கான காரணம் என்னவென்றால், இன்னும் பெரும்பாலான 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தடுப்பூசி போடவில்லை என்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் தொழில்துறை துறைக்கான தடுப்பூசி மையங்களும் 24 மணிநேரம் இயங்கும் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here