பெட்டாலிங் ஜெயா, ஜூலை 17:
செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேருக்கு நேரான கற்றல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய தடுப்பூசி விகிதங்களை கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (ஜூலை 17) ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது. மேலும் தற்போது நடமுறையிலுள்ள ஆன்லைன் அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கை ஆகஸ்ட் 31 வரை தொடரும் என்றும் அது தெரிவித்தது.
இருப்பினும், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்கால பாதிப்புகளின் பாதிப்புகளின் மதிப்பீடுகளைப் பொறுத்து இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No need to open..no we all need children safe not study…my kids is import to me no study