நைஜீரியாவில் பணத்திற்காக கடத்தப்பட்ட 100 பேர்

போலீசார் பத்திரமாக மீட்டனர்

நைஜீரியா:

நைஜீரியாவில் கடந்த மாதம் பணத்துக்காக கடத்தப்பட்ட நூறு பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

கடந்த மாதம் எட்டாம் தேதி மனாவா கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள், தாய்மார்கள் உள்பட நூறு பேரை ஆயுதம் ஏந்திய கும்பல் கடத்திச் சென்றது.


40 நாட்களுக்கு மேல் கடத்தல்காரர்கள் பிடியில் சிக்கித் தவித்தவர்களை பிணையத் தொகை செலுத்தாமல் மீட்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.


நைஜீரியாவில் இந்தாண்டு மட்டும் 2,371 பேர் பணத்துக்காக கடத்தப்பட்டதாகவும், அதிலும் 200 பள்ளி மாணவர்கள் இன்னும் கடத்தல்காரர்கள் வசம் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here