டுவிட்டரில் அறிமுகமாகும் டிஸ்லைக் பட்டன்!

 பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

டுவிட்டரில் விரைவில் டிஸ்லைக் பட்டன் வரும் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது டுவிட்டரில் லைக்ஸ், ஷேர், கமெண்ட்ஸ், ரீடுவிட் ஆகிய நான்கு பட்டன்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டுவிட்டரில் டிஸ் லைக் பட்டன் விரைவில் கொண்டுவர டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்ததாகவும் இது குறித்து சோதனை செய்து வருவதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது

முதல்கட்டமாக இந்த டிஸ்லைக் பட்டனை ஐஓஎஸ் பயனாளர்களுக்கு மட்டும் கிடைக்கும் என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் டுவிட்டை பார்க்கும் நபர்களுக்கு டிஸ்லைக் பட்டன் மட்டுமே தெரியும் என்றும் எத்தனை பேர் டிஸ்லைக் செய்திருக்கிறார்கள் என்பது டுவிட் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறப்படுகிறது

டுவிட்டரில் டிஸ்லைக் பட்டன் அமலுக்கு வந்தால் ஒருவருடைய டுவிட்டை எத்தனை பேர் டிஸ்லைக் செய்துள்ளார்கள் என்பதை அவர் பார்த்து தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here