ஆட்டுக்கு வால அளந்து வைச்சிருக்கலாம்!

 5 கொம்புகள யாரு வைச்சாயுகம் முடியப்போகிறதா?

யுகம் முடிவதற்காக ஆர்வத்தோடு காத்திருப்பவர்களுக்கு ஒரு சங்கேதம். குறியீடு கிடைத்திருக்கிறது.

இந்த முறை ஐந்து கொம்புகளோடு கூடிய ஆடு பூமியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பிறந்துள்ளது. இந்தக் கூற்றை நாங்கள் சொல்லவில்லை. அந்த ஆட்டைப் பார்த்த நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

நைஜீரியாவில் வளர்ந்துவரும் ஒரு ஆடு அண்மையில் செய்தியில் ஏறியிருக்கிறது. தலையில் கிரீடம் வைத்தாற் போல அந்த ஆட்டுக்கு ஐந்து கொம்புகள் அழகாக உள்ளன. சுற்றுப்புறம் உள்ள மக்கள் எல்லாம் அதனை பார்ப்பதற்கு வந்து கூடுகிறார்கள்.

ஜூலை 21ஆம் தேதி பக்ரீத் பண்டிகைக்காக நைஜீரியா லாகோஸில் ஒரு மார்க்கெட்டில் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. வியாபாரம் படுஜோராக நடந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் ஒருவர் எடுத்து வந்த ஆடு அனைவரின் பார்வையையும் ஈர்த்தது. சாதாரணமாக ஆட்டுக்கு இரண்டு கொம்புகள் தானே இருக்கும்! ஆனால் இந்த ஆட்டுக்கும் மட்டும் 5 கொம்புகள் இருந்ததால் அதனை அனைவரும் விந்தையாகப் பார்த்தார்கள்.

சிலர் அந்த ஆட்டை போட்டோவும் வீடியோவும் எடுத்து சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்ததால் அது வைரலாகியுள்ளது.

ஸ்டாச்யூ ஆஃப் லிபர்டி கிரீடம் போலவே அந்த ஆட்டுக்கு கொம்புகள் உள்ளன என்று பலரும் கமெண்ட் செய்துள்ளார்கள். மேலும் சிலர் இது யுகத்தை முடிப்பதற்கான குறியீடாக குறிப்பிட்டுள்ளார்கள். இந்த வீடியோவை பார்த்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here