நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கும் கேள்விகளுக்கும் அனுமதி வழங்கப்படும் ; சபாநாயகர் டத்தோ அசார்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26 :

இன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வின் போது, விவாதங்களும் கேள்விகளும் அனுமதிக்கப்படாது என்பது தவறான கருத்து என்று நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அசார் அஜீசன் ஹருன் கூறுகிறார்.

“நான் நாடாளுமன்றம் ஆரம்பித்த முதல் நாளே விவாதங்களுக்கு அனுமதிப்பேன். உண்மையில், அனைத்து எம்.பி.க்களுக்கும் நான் கேள்விகள், திட்டங்கள், விவாதங்களுக்கும் அனுமதி வழங்குவேன் என்று தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூறினேன்”. மேலும் விவாதங்களை அனுமதிக்கக் கூடாது என்று நான் கூறவில்லை (எங்கிருந்து வருகிறது). இது தவறானது, உண்மை இல்லை ”என்றும் அவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் , சிறப்பு அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் ஏற்கனவே பிரதமரால் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இது வழக்கத்திற்கு மாறானது அல்ல. அவை சபையின் விதிகளுக்கு உட்பட்டவை என்றும் சிறப்பு அமர்வு, நிலையான உத்தரவு 11 (3) இன் கீழ் பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசினால் அழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

நிலையான ஆணை 11 (3) கூறுகிறது, பிரதமர் சபாநாயகருக்கு ஒரு முக்கியமான விடயத்தை முன்வைத்தால் அல்லது சபை ஒத்திவைக்கப்படும் போது பொது நலன் கொண்ட ஒரு விஷயத்தை முன்வைத்தால், அது முந்தைய தேதியில் அறிவிக்கப்பட வேண்டும் .

இன்று (ஜூலை 26)  தொடங்கி வியாழக்கிழமை (ஜூலை 29) மற்றும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நாடாளுமன்றம் ஐந்து நாட்கள் நடக்கும். இக் கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் அவசரநிலை குறித்த அரசாங்க அறிக்கைகளையும், கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளையும் கேட்பார்கள் தொடர்பாகவும் கேள்வி எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

இத்தகைய அமர்வு மலேசியாவிற்கு தனித்துவமானது அல்ல என்று கூறிய அசார், இது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பொதுமன்றத்தில் கூட நடைமுறையில் இருந்தது என்றும் கூறினார்.

நிலையான உத்தரவு 14 (1) (i) இன் கீழ் வரும் நாடாளுமன்றத்தில் விடயங்களை விளக்க அமைச்சர்கள் அறிக்கைகளை வெளியிடுவது இயல்பு என்றும் அவர் விளக்கினார்.

“விடயங்களை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர பல வழிகள் உள்ளன. இது ஒரு பிரேரணை அல்லது ஒரு மசோதா மூலம் செய்யப்படலாம், அவை தவிர, அமைச்சர்களின் அறிக்கைகள் மூலம் செய்யலாம் என்றும் “இந்த விடயத்தில், நாட்டின் மீட்பு, உதவி தொகுப்புகள், தடுப்பூசி, சுகாதாரம் மற்றும் பலவற்றில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்த விளக்கம் கேட்ப்பார்கள்  என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

“பாராளுமன்ற உறுப்பினர்கள், நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கேள்விகளைக் கேட்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சமமான நேரம் ஒதுக்கப்படும்” என்றும் “நான் அந்த பட்டியலைப் பின்பற்றுவேன்” என்றும் “எனது ஒரே நம்பிக்கை எல்லோரும் கொடுக்கப்பட்ட நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள்,” என்றும் அவர் கூறினார்.

மேலும், அமைச்சர்கள் , பாராளுமன்ற ஊழியர்கள், தொடர்பு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களான ஓட்டுநர்கள் மற்றும் மெய்க்காப்பாளர்கள் அவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு RD-PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“மிக சமீபத்திய தகவல் அடிப்படையில், 205 எம்.பி.க்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் 12 பேர் தடுப்பூசியின் முதல் டோஸையும் 3 எம்.பி.க்கள் இன்னும் தங்கள் தடுப்பூசியை பெறவில்லை என்றும் கூறினார்.

“நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிற நபர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். இல்லையெனில், அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், ”என்று அவர் கூறினார், அனைவரின் தடுப்பூசி நிலையை சரிபார்க்க போலீஸ் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் பாதுகாப்பு பலமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

“அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மூன்று தொடர்பு அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் , துணை அமைச்சர்களுக்கு இருவரும் எம்.பி.க்களுக்கும் ஒருவரும் அனுமதிக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.

சிறப்பு அமர்வில் கலந்துகொள்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், இரட்டை முகக்கவசம் ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here