மீன்பிடிக்கச் சென்ற இந்திய ஆடவர் மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு

மோரிப், ஜூலை 26:

மோரிப் கஞ்சாங் லாவுட்டைச் சேர்ந்த இந்திய ஆடவரான தினேஸ்வரன் (27) என்பவர் மோரிப் கடல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை(ஜூலை 24) அவருக்கு சொந்தமான படகில் நண்பர் ஒருவருடன் மீன்பிடிக்க சென்றுள்ளார். மாலை 6 மணியளவில் கடலில் ஏற்பட்ட அசாதாரண கொந்தளிப்பினால், கடலில் வலை வீசிக்கொண்டிருந்த தினேஸ்வரன் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார்.

இறந்தவரின் நண்பர் அவரை காப்பாற்ற முயற்சித்த போதும் கடலின் அலை மிக வேகமாக இருந்ததால், காப்பற்ற முடியவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும் இச்சம்பவம் குறித்து உடனடியாக இறந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினரும் அவரது சக மீனவர்களும் சேர்ந்து அவரை தேடும் பணியை மேற்கொண்டனர்.

இன்று ஜூக்ரா பெர்மாத்தாங் பாசிர் கடல் பகுதியில் ஒரு ஆடவரின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த ஆடவரது உடல் மீட்கப்பட்டதாகவும் தீயணைப்பு துறை தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here