இலவசமாக விண்வெளிக்கு  பயணிக்கலாம்

பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது!

பிரிட்டன்:

ஜூலை 11 அன்று, 70 வயதான பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கான சுற்றுலா பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வரலாறு படைத்தார். இப்போது அவரது நிறுவனமான வெர்ஜின் கேலக்டிக் (Virgin Galactic), விண்வெளிக்கான அதன் முதல் வணிக விமான சேவையை அடுத்த ஆண்டில் அதாவது 2022 ஆண்டில் தொடங்க தயாராக உள்ளது.

இந்த விண்வெளி விமானத்தின் மூலம் விண்வெளி வழியாக பயணிக்க, கோடி ரூபாய் கட்டணம். இந்நிலையில், விர்ஜின் கேலடிக் விண்வெளிக்கான பயணத்தில் பங்கேற்க  இலவசமாக ஒரு போட்டியை முன்வைத்துள்ளது, இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர், விண்வெளி பயணத்தை இலவசமாக அனுபவிக்க முடியும்.  தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு   ஜன்னல் சீட் ஒதுக்கப்படும்.

வெர்ஜின் கேலக்டிக் அதன் முதல் வணிக விண்வெளி விமான சேவையில், 2 டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கும். இதற்காக அறிவிக்கப்பட்ட போட்டிக்காக பதிவுசெய்தவர்களில் குலுக்கல் முறையில் அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில் உள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், அதிர்ஷ்ட வெற்றியாளர்களின் விண்வெளி பயண அனுபவம் எச்டி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும். இந்த மறக்கமுடியாத பயணத்தின் ஒப்பற்ற அனுபவத்தைப் பெற அவர்களுக்கு ஜன்னல் இருக்கையும் வழங்கப்படும். அவர்களுக்கு ஒரு சிறப்பு கண்ணாடியும் வழங்கப்படும், அதில் அவர்கள் தங்களை புவி ஈர்ப்பு இல்லாத சூழலில் மிதப்பதைக் காணலாம்.

இந்தியர்கள் பதிவு செய்யலாம்

ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட நாடுகளில் அல்லது விண்வெளி அனுபவங்களைச் சட்டம் அனுமதிக்காத நாடுகளில் வாழும் மக்களுக்கு இந்த போட்டியில் பங்கேற்பது சாத்தியமில்லை. இந்த நாடுகளில் இந்தியா இல்லை என்பதால், இந்தியர்கள் இலவசமாகப் பயணிக்க தங்களைப் பதிவு செய்து கொண்டு போட்டியில் பங்கேற்கலாம்

இலவச விண்வெளி பயண டிக்கெட்டுகளை வெல்ல omaze.com/space என்ற வலைத்தளத்தில் உள்நுழைக. அதில் 2 ஆப்ஷன்கள் வரும். ஒன்று பணம் செலுத்தி விண்வெளி பயணத்திற்கான டிக்கெட்டுகளை பெறுவது, மற்றொன்று இலவசமாக டிக்கெட்டுகளைப் பெறும் ஆப்ஷன் இருக்கும்.

ஒரு மின்னஞ்சல் ஐடி மூலம் ஒரு நபர் மட்டுமே பதிவு செய்ய முடியும், ஆனால், அவர் 6000 முறை வரை பதிவு செய்யலாம், இதனால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உங்கள் படிவத்தை சமர்ப்பிக்கவும். இந்த பதிவுகளை செப்டம்பர் 2, 2021 வரை செய்யலாம்.

இந்த விண்வெளி சுற்றுப்பயணத்திற்கு செல்ல தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது கட்டாயமாகும். இது தவிர, வயது வரம்பு குறைந்தது 18 வயதானவராக இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here