கோலாலம்பூர், ஜூலை 30:
நீங்கள் எப்போதாவது டிக்டோக் வழியாக ஸ்க்ரோலிங் செய்யும் போது, நகைச்சுவை உணர்வு மற்றும் நம்பமுடியாத பெரிய வாயைக் கொண்ட ஒரு பெண்ணை பார்த்திருப்பீர்கள். அவர் தற்போது உலகிலேயே மிகப்பெரிய வாயைக் (6.52 செ.மீ.) கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் சமந்தா ராம்ஸ்டெல்.
6.52 செ.மீ. நீளமுள்ள ஒரு பெரிய வாயைக் கொண்டு, டிக்டோக்கில் (TikTok) வைரலானதை தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய வாயை கொண்டவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்த சமந்தா, “டிக்டாக்கில் உள்ள தனது வீடியோ ஒன்றில் தான் வாயை பெரிதாக்கியதை பார்த்து, உலக சாதனை வாயை வைத்திருப்பதாக உறுதியாக நம்பி, தன்னை கின்னஸ் பதிவுக்கு செல்லும்படி பின்பற்றுபவர்கள் தன்னை ஊக்குவித்தனர் என்றும் கூறினார்.
மேலும் தன்னுடைய குடும்பத்தில் யாருக்கும் தன்னை போன்ற பெரிய வாய் இல்லை என்றும் ஆனால் தான் யார் என்பதற்கான தனித்துவமான பண்பாக தனது வாய் மாறியது என்றும் தெரிவித்தார்.
தான் வளர்ந்து வரும் போது, மற்றயவர்களால் அடிக்கடி கொடுமைப்படுத்தப்பட்டு கேலி செய்யப்பட்டதாகவும் தன்னை “பிக் பாஸ் வாய்” என்றும் அழைத்தார்கள் என்றும் கூறினார்.
ஆனால் சில காலத்திற்குப் பிறகு, தனது வாயை தான் நேசிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
சாமந்தாவின் வாய் உண்மையில் எவ்வளவு பெரியது? என்பதை பார்ப்பதற்கு சில தினசரி பாவிக்கும் பொருட்களை வாயின் இடைவெளியுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.
ஒரு முழு பச்சை ஆப்பிளை அப்பெண்ணின் வாயில் பொருத்த முடியும், நான்கு ஒற்றை அடுக்கப்பட்ட சீஸ் பர்கர்கள் மூலம் முழுமையாகக் கடிக்க முடியும், மற்றும் ஒரு முழு அளவிலான பிரஞ்சு பொரியலை அவரது வாயில் பொருத்த முடியும்! என்றும் கின்னஸ் அளவீட்டிற்கு கணக்கிடும் போது முயற்சித்து இதனை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.