கோவிலுக்கு போகும் போது பட்டுப்புடவை, தங்கநகை அணிய வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா

பட்டு ஆடைகள் உடலின் காந்த சக்தி அதிகம் வெளியேறாமல் காக்கும் தன்மை கொண்டது. இல்லற வாழ்வில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பட்டு ஆடைகளை அதிகம் உடுத்தலாம்.

கோவிலுக்கும் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு செல்லும் போதும் பட்டாடைகளையும் தங்க நகைகளையும் அணிந்து செல்வதன் மூலம் உடலில் நேர்மறை ஆற்றலும் காந்த சக்தியும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும்.

நம்முடைய முன்னோர்கள் எந்த ஒரு விஷயத்தையும் காரணமில்லாமல் சொல்லியிருக்க மாட்டார்கள். பட்டு சேலைக்கு என தோஷமும் கிடையாது. நம் தமிழ் திருமணங்களில் பட்டுபுடவைகள் தான் முன்னிலை வகிக்கின்றன. எத்தனையோ விதம் விதமான டிசைனர் புடவைகள் வந்தாலும் பாரம்பரிய திருமணப்புடவைகள் என்றாலே அதுபட்டுப்புடவைதான்.

கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிற திருவிழாக்களின் போது பெண்கள் புதிய பட்டு புடவைகள் அணிந்து செல்வது சிறந்ததாகும்.

ஏனெனில் கோவில் குடமுழுக்கு நடக்கும் பொழுது செய்யப்படும் யாகங்கள், மந்திர உச்சாடனங்கள், கோவில் கும்பத்திற்கு குடமுழுக்கு செய்த பின்பு பக்தர்களின் மீது தெளிக்கப்படும் தீர்த்தம் போன்றவை இறை சக்தி அதிகம் கொண்டவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here