கோலாலம்பூர், ஜூலை 31:
கோலாலம்பூரின் லோரோங் சிலோனில் உள்ள ஒரு வாடகை அடுக்குமாடி வளாகத்தில் ஒரு பாதுகாவலர் இறந்து கிடந்தார்.
இந்த வழக்கு குறித்து சனிக்கிழமை (ஜூலை 31) அதிகாலை 4.15 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக டாங் வாங்கி துணை கமிஷனர் முகமட் ஜைனால் அப்துல்லா கூறினார்.
“இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது என்றும் உடனே சம்பவ இடத்திற்கு போலீஸ் உறுப்பினர்களை அனுப்பி வைத்தோம்” என்று தெரிவித்தார்.
“28 வயதுடைய நபரின் சடலம் என்பது விசாரணையில் தெரியவந்தது” என்று அவர் சனிக்கிழமை ஒரு அறிக்கையில் கூறினார்.
ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், அவரது மணிக்கட்டு மற்றும் நெற்றியில் காயங்கள் காணப்பட்டதால் அந்த நபர் கொல்லப்பட்டதாக போலீசார் நம்புகின்றனர்.
மேலும் விசாரணையில், பாதிக்கப்பட்டவரின் நண்பர்களில் ஒருவரின் பெயரில் அவர்கள் தங்கியிருந்த யூனிட் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரியவந்ததாக அவர் கூறினார்.
“மேலும் 20 வயதுடைய சந்தேக நபரை நாங்கள் கைது செய்துள்ளோம், அவர் மேலதிக விசாரணைகளுக்கு உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
மேலும் கொலைக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை.
பிரேத பரிசோதனைக்காக உடல் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏசிபி முகமட் ஜைனால் கூறினார்.
“தண்டனைச் சட்டம் பிரிவு 302 -ன் கீழ் கொலையாக நாங்கள் வழக்கை வகைப்படுத்தியுள்ளோம்,” என்று அவர் கூறினார். அத்தோடு இவ் வழக்கு குறித்த தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து தமக்கு தகவல் தருமாறும் வலியுறுத்தினார்.
இச்சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவர்கள் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தை 03-2600 2222 அல்லது கோலாலம்பூர் போலீஸ் துரித எண் 03-2115 9999 ல் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.