ரோந்து வாகனத்தில் கேவலமான செயல்.

சீருடையில் இருந்த அதிகாரிகள் லீலை

மெக்ஸிகோவில் இரண்டு காவல்துறையினர் பொது இடத்தில் வாகனத்தை நிறுத்தி சீருடையுடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் உள்ள Ecatepec de morelos என்ற நகராட்சியில் இரண்டு காவல்துறையினர் ரோந்து வாகனத்தை நிறுத்தி கடமையில் இருந்த வேளையில் சீருடையுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அதனை அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் வீடியோ எடுப்பதை கூட கவனிக்காமல் அந்த இரண்டு காவல்துறையினரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

மேலும் அடையாளம் தெரியாத அந்த நபர் வெளியிட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இதையடுத்து அந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும் ஒழுங்கு முறையை மீறியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டதாக Ecatepec நகராட்சி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here