லவ்லீனா பதக்கம் வாங்கிட்டார்ர்ர்ர் ….!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில், மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போரோகைன் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், நாட்டுக்கு பதக்கத்தை உறுதி செய்து உள்ள லவ்லீனாவின் சொந்த கிராமத்துக்கு தற்போது சாலை வசதியும் கிடைத்துள்ளது.
அசாம் மாநிலம் சருபதார் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரோமூகியா என்ற கிராமத்தில் பிறந்த லவ்லீனா, பதக்கம் பெற்று நாடு திரும்பும் முன்னரே அவரின் சொந்த கிராம மக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
அண்மையில் பெய்த கனமழை காரணமாக அவரின் கிராமத்துக்கு செல்லும் சாலை முழுவதும் சேதம் அடைந்து விட்டது. இந்நிலையில், டோக்கியோவிலிருந்து லவ்லீனா நாடு திரும்புவதற்கு முன் அந்த சாலையை சரி செய்யும் பணியில் அம்மாநில பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருகிறது.
நாட்டுக்கு பதக்கத்தை வென்று கொடுத்தது மட்டுமல்லாமல், பிறந்த சொந்த கிராமத்திற்கு சாலையை சரி செய்து கொடுத்துள்ள தங்கள் கிராமத்தின் நாயகி லவ்லீனாவை அவரின் கிராம மக்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.