கோலாலம்பூர், ஆகஸ்டு 2:
இன்று நடைபெறவிருந்த சிறப்பு நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படுவதை எதிர்த்து கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இன்று காலை டத்தரான் மெர்டேகாவில் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
PKR கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களான பெஜுவாங்கின் டத்தோ ஸ்ரீ முக்கிரிஸ் மகாதீர், அமானா நெகாரா கட்சியின் முகமட் சாபு, வாரிசன் கட்சியின் டத்தோ ஸ்ரீ ஷாஃபி அப்டால், முடாவின் நிறுவனர் சையத் சாதிக் சையது அப்துல் ரஹ்மான், மற்றும் DAP பொதுச் செயலாளர் லிம் குவான் எங் போன்றோர் காலை 9 மணி முதல் சுதந்திர சதுக்கத்தில் கூடியிருந்தார்கள்.
பிரதமர் முஹிடின் யாசின் மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காலை 10.20 மணியளவில் நாடாளுமன்றம் நோக்கி தங்கள் நடைப்பயணத்தை அரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

























