இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எப்போது?

தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டின் எதிரொலி

‘தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய, இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும்’  அன்புமணி தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள், கடந்த 28 ஆம் தேதி, வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கில் 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, சிங்கள கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதலில், தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இலங்கை கடற்படையினரின், இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் தாக்கியதற்காக, இந்தியாவுக்கான இலங்கை துாதரை, இந்திய வெளியுறவுத்துறை அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

கேரளத்தின் அரபிக் கடல் பகுதியில், தமிழக மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றதற்காக, இத்தாலிய கடற்படையினரை கைது செய்தனர்.

அதேபோல தமிழக மீனவர்களைச் சுட்ட விவகாரத்திலும், சிங்கள கடற்படையினரை உடனே கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அன்புமணி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here