உஷார் நிலையில் பாதுகாப்பு
காஷ்மீர் எல்லையை ஒட்டியுள்ள சம்பா மாவட்டத்தில் பரி பிரமனா என்ற இடத்தில் 2 ட்ரோன்கள் மற்றும் ஸ்மெயில்பூர் ரோடு , பிர்புர் ஆகிய இடங்களில் தலா ஒரு ட்ரோன் என மொத்தம் 4 ட்ரோன்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியில் இருந்து 10.40 மணிக்குள் பறந்தன.
ராணுவ முகாம்களுக்கு அருகில் பறந்ததால், போலீஸாரும் பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டு ட்ரோன்கள் கண்காணிக்கப்பட்டன. எனினும், அந்த ட்ரோன்களை பாதுகாப்பு படையினர் சுடவில்லை.
சிறிது நேரத்தில் அவை மறைந்துவிட்டன என்றும் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பா மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.