அதிகார துஷ்பிரயோகம் செய்த ஃபெல்டா (Felda) முகமையாளருக்கு; ஐந்து நாட்கள் தடுப்புக்காவல்

குவாந்தான்: 64,739 வெள்ளி மதிப்புள்ள விவசாயத் திட்டம் சம்பந்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக ஃபெல்டா நிறுவன முகாமையாளர் ஐந்து நாட்களுக்கு போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) விண்ணப்பத்தை தொடர்ந்து ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உதவிப் பதிவாளர் ஹுமைரா KM ஹைடர் பிறப்பித்தார்.

38 வயதான அந்த நபர், நேற்று மாலை 7 மணிக்கு குவாந்தான் மாநில MACC தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை கொடுத்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

64,739 வெள்ளி மதிப்புள்ள விவசாயத் திட்டத்துக்காக ஃபெல்டா நிறுவனத்துடனான மோதல் இருந்தபோதிலும், ஒரு நிறுவனத்தை நியமிக்க கொள்முதல் குழுத் தலைவர் பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

குவாந்தான் மாநில MACC இயக்குநர் ஹைருஷாம் பின் முகமட் அமீன் @ ஹமீமை தொடர்பு கொண்டபோது, அவர் ஃபெல்டா நிறுவன முகாமையாளர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். மேலும் இவ்வழக்கு தனிநபர் எம்ஏசிசி சட்டம் 2009 பிரிவு 23 (தனிப்பட்ட திருப்திக்கு அதிகார துஷ்பிரயோகம்) கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here