திட்டத்தை கைவிட்ட இங்கிலாந்து பிரதமர்..

எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்ததே காரணமாம் ..!!

சுற்றுலா பயணிகளுக்காக போடப்பட்ட புதிய பட்டியலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட அமைச்சர்களும் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து இங்கிலாந்து நாட்டின் பிரதமர் அதனை ரத்து செய்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகள் தங்களுடைய நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் ஏற்கனவே சுற்றுலா பயணிகளுக்காக பயணப் பட்டியல் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்த பயணப் பட்டியலில் சிகப்பு, பச்சை அம்பர் போன்றவை இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து புதிதாக 2 பிரிவுகள் இந்தப் பயணப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதும் இந்த வார இறுதிக்குள் வெளிநாட்டு பயணிகளுக்கான பயணப் பட்டியலில் புதிதாக ஒரு பிரிவை சேர்ப்பதற்கு இங்கிலாந்து நாட்டின் பிரதமர் திட்டமிட்டுள்ளார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட அமைச்சர்கள் தரப்பிலிருந்தும் கடுமையான எச்சரிக்கை எழுந்துள்ளது.

மேலும் இவ்வாறு தொடர்ந்து பயணப் பட்டியலில் பிரிவுகள் சேர்க்கப்பட்டு வந்தால் இங்கிலாந்து வாசிகளின் கோடை விடுமுறை கனவு சிதைந்து விடும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளிநாட்டு பயணிகளுக்கான பயணப் பட்டியலில் புதிய பிரிவைச் சேர்க்கும் திட்டத்தை கைவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here