நுரையீரல் மருத்துவ நிபுணர் டாக்டர் சசிகுமார் மரணம்; சுகாதார இயக்குநர் ஜெனரல் இரங்கல்

கோலாலம்பூர்: நாட்டில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்து டாக்டர்கள் உட்பட அனைத்து முன்களப்பணியாளர்களும் மிக அர்ப்பணிப்புடன் தமது சேவையை திறைமையாக செய்து வருகின்றனர். இந்நிலையில் நுரையீரல் சுவாச மருத்துவ நிபுணர் டாக்டர் சசிகுமாரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து சுகாதார தலைமை இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தமது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“டாக்டர் சசிகுமாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரது இறப்பு நுரையீரல் மருத்துவ துறைக்கும் மற்றும் நாட்டிற்கும்  மிகப் பெரும் இழப்பு” என்றும் பதிவிட்டிருந்தார்.

மேலும் “ டாக்டர் சசிகுமார் மிகவும் ஆர்வமுள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள நுரையீரல் நிபுணர், அவரது வேலையில் மிகுந்த புத்திசாலி“ என்றும் “மற்றும் அவர் நோயாளிகளை அணுகும் முறை மிகவும் தாழ்மையாக இருக்கும்” என்றும் அவர் தனது முகநூல் பதிவில் மிகவும் இரக்கமாக தெரிவித்திருந்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here