ஜோகூர் பாரு: முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சையத் சாதிக் சையது அப்துல் ரஹ்மான் மீது வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகளுக்கு விசாரணை நடத்தப்படும் என மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜூலை 22 அன்று, சையத் சாதிக் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றவியல் நம்பிக்கை மீறல் (சிபிடி) மற்றும் அவரது முன்னாள் கட்சியான பார்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியாவுக்குச் சொந்தமான நிதி முறைகேடு ஆகிய இரண்டு ஊழல் வழக்குகள் விசாரணைக்கு வந்தது.
29 வயதான அவர் நீதிபதி அசுரா அல்வி முன் குற்றத்தை புரியவில்லை என்று மறுத்தார். முதல் குற்றச்சாட்டின்படி, கட்சியின் இளைஞர் தலைவராக சையத் சாதிக் கட்சியின் இளைஞர் பிரிவான ஆர்மடா மலேசியாவுக்கு சொந்தமான நிதியை ஒப்படைக்கவில்லை என்றும் மேலும் அவர் பெர்சத்துவின் அனுமதி இல்லாமல் காசோலையைப் பயன்படுத்தி 1 மில்லியன் பணத்தை திரும்பப் பெற்றதாகக் கூறி சிபிடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த குற்றம் சிஐஎம்பி வங்கி, மேனாரா சிஐஎம்பி கேஎல் சென்ட்ரல், ஜலான் ஸ்டீசன் சென்ட்ரல் 2, மார்ச் 6, 2020 அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது.
சையத் சாதிக் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 405 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது அதே சட்ட பிரிவு 406 இன் கீழ் தண்டனைக்குரியது மற்றும் 10 ஆண்டுகள் சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இரண்டாவது குற்றச்சாட்டுக்காக, 14ஆவது பொதுத் தேர்தலுக்கான பெர்சத்துவுக்கு சொந்தமான 120,000 வெள்ளி பங்களிப்பு பணத்தை சையத் சாதிக் தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
அவர் ஏப்ரல் 8 மற்றும் 21, 2018 க்கு இடையில், தாமான் பாண்டான் ஜெயாவில் உள்ள மே பேங்கில் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 403 இன் கீழ் குற்றச்சாட்டுக்கு ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.