13 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் தலைமை சமய போதகருக்கு; 6 நாட்கள் தடுப்புக்காவல்

கோத்தா பாரு: 13 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான விசாரணைக்கு உதவும் நோக்கில் பொது சமயப் பேச்சாளராக இருக்கும் ஒரு “தலைமை சமய போதகர் (Mudir pondok)” இன்று முதல் ஆறு நாட்களுக்கு போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 பிரிவு 14 (a) ன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக 33 வயதான அந்த நபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிளந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷஃபியன் மமத் இவ்விடயம் பற்றி கூறியபோது, கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்ற உதவிப் பதிவாளர் நோர் ஃபைசா அப்துல்லாவால் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.

நேற்று இரவு 10.44 மணியளவில் தானா மேராவில் நடந்த சம்பவம் குறித்து 13 வயது சிறுவன் போலீஸ் புகார் அளித்ததாகவும், அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 1 மணியளவில் மச்சாங்கில் உள்ள ஒரு வீட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் ஷஃபியன் கூறினார்.

அறிக்கையின் அடிப்படையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 3) காலை 8 மணியளவில் கம்போங் சட் தெங்காவில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

“முதலில், சந்தேக நபர் (முதிர் பண்டோக்) புகார்தாரரான சிறுவனை யாராவது பார்க்கக் கூடும் என்ற பயத்தில் சிறுவனை அறைக்கு அழைப்பதற்கு முன்னர், அவரை மசாஜ் செய்யச் சொன்னார். பின்னர் சந்தேகநபர் அறையில் இருந்தபோது புகார்தாரரை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படுகிறது, “என்று அவர் கூறினார்.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here