மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய மனிதர்களின் பற்கள் போன்ற வடிவமைப்பில் பற்களைக் கொண்ட ஒரு மீனின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்தவர் நாதன் மார்டின். இவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவர் இவரது சகோதரர் உடன் சில தினங்களுக்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தார்.
அப்பொழுது அவரது வலையில் அரிய வகை ஆட்டு தலை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீனின் பற்கள் பார்ப்பதற்கு மனிதர்களுக்கு இருக்கும் பற்களைப் போல இருந்தது. மேலும் ஆடுகளுக்கு இருக்கும் தலையை போலவே இருந்தது. இந்த மீனை ஏழைகளின் நண்டு என அந்நாட்டு மக்கள் அழைக்கிறார்களாம். அதே போல இந்த மீனை சமைத்து சாப்பிடும் போது இதன் சுவையானது நண்டு போல இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த அரிய வகையான மீன்கள் பாறை இடுக்குகளில்தான் வாழுமாம். அதனால் இந்த மீன் வலையில் சிக்குவது கடினம். இவர் பிடித்த இந்த மீனிற்கு வாயில் மனிதர்களுக்கு இருப்பது போல முன்பக்கம் மட்டும் இல்லாமல் உள்ளே பல வரிசையில் பற்கள் இருந்தன. அதிலும், முக்கியமாக கீழ் வரிசையில் இருந்த பற்கள் கூர்மையாக இருந்தது. தற்போது இந்த மீனின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.