ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற டத்தோ அசிசுல்ஹஸ்னி அவாங்கிற்கு வீ கா சியோங் வாழ்த்து

டோக்கியோ  ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் டத்தோ அசிசுல்ஹஸ்னி அவாங்கை வாழ்த்தியுள்ளார்.

வாழ்த்துக்கள், டத்தோ அசிசுல்ஹஸ்னி அவாங்.

இது மலேசியாவுக்கு கிடைத்த பெருமை

போக்குவரத்து அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) தனது முகநூல் பக்கத்தில் “நாட்டிற்காக உங்களால் முடிந்ததைச் செய்துள்ளீர்கள்” என்று கூறினார். இறுதிப் போட்டியில் டச்சு உலக சாம்பியன் ஹாரி லாவ்ரேசனை முந்திய பிறகு அசிசுல்ஹஸ்னி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பிரிட்டனின் ஜேசன் கென்னிக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.

எம்சிஏ தலைவரான டாக்டர் வீ,  சைக்கிள் ஓட்ட வீரர் முஹம்மது ஷா பிர்தஃஸ் சஹ்ரோமுக்கும், டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டதற்காக முழு மலேசியக் குழுவினருக்கும் வாழ்த்து மற்றும் நன்றி தெரிவித்தார். முஹம்மது ஷா கால் இறுதிப் போட்டியில்  Heat 2 இல் வெளியேற்றப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here