பெட்டாலிங் ஜெயா: எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது துரித நடவடிக்கை எடுப்பதன் மூலமும், அரசு அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கையை தாமதப்படுத்துவதன் மூலமும் காவல்துறை இரட்டை நிலைப்பாட்டைப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
சங்கரா என் நாயர் இந்த ஆண்டு தொடக்கத்தில் SOP களை மீறி பிடிபட்ட போது கூட்டரடு பிரதேச அமைச்சர் அன்னுார் மூசா மற்றும் தோட்டத் தொழில்கள் மற்றும் பொருட்கள் துறை அமைச்சர் கைருதீன் அமன் ரசாலி போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது அதிகாரிகள் மிகவும் தாமதமாக செயல்பட்டார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியியிருந்தது என்றார் நாயர்.
மாறாக, பிகேஆர் தலைவராக இருக்கும் அன்வாரையும், பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டம் நடத்த முயன்றது குறித்து கேள்வி எழுப்ப காவல்துறை விரைவாக செயல்பட்டது என்று அவர் கூறினார்.
மக்களவையில் உறுதி செய்யப்பட்ட கோவிட் -19 தொற்றுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், மக்களவையின் சிறப்பு அமர்வு மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோர முயன்றனர்.
சபாநாயகர் அசார் ஹருன், எந்த கூட்டமும் நடத்தப்படாது என்று முடிவு செய்திருந்தாலும், நாடாளுமன்ற வளாகத்திற்குள் உறுப்பினர்கள் செல்வதை வெளிப்படையாக தடை செய்யவில்லை என்று அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் மற்ற கடமைகளைச் செய்ய நாடாளுமன்றம் செல்ல உரிமை உண்டு என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை நுழையவிடாமல் தடுத்தபோது காவல்துறை தொழில்நுட்ப ரீதியாக சட்டத்தை மீறியது என்றார். ப்பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கத்தின் ஆதரவைத் திரும்பப் பெற அம்னோ முடிவு செய்த நாளில், பிரதமர் முஹிடின் யாசினின் இல்லத்தில் அரசியல் தலைவர்கள் கூடிவருவதை காவல்துறை விசாரிக்குமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் விதிகளை மீறுவதாக கூட்டம் இருந்தது. “முஹிடின் வீட்டிற்கு சென்றவர்கள் குறித்து யாரும் காவல்துறை புகார் தாக்கல் செய்யாமல் கூட போலீசாரால் விசாரிக்க முடியும் என்று அவர் கூறினார்.

























