இந்தியா, இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து துபாய் திரும்புவோருக்கு தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை

இலங்கை, இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து துபாய் திரும்புவோருக்கு தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை எமிரேட்ஸ் விமான நிறுவன நிர்வாகமும் உறுதி செய்துள்ளதுடன், தங்கள் வலை பக்கத்தில், இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து துபாய் திரும்புவோர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை என தெரிவித்துள்ளது .

ஆனால், விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் GDRFA நிர்வாகத்திடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும் எனவும், விமானம் புறப்படும் 48 மணி நேரத்திற்குள் கொரோனா சோதனை செய்யப்பட்ட சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும்.

அத்தோடு, சான்றளிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து QR குறியீட்டுடன் PCR சோதனை அறிக்கைகள் பெறப்பட்டு அதை அசல் அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here