ஈப்போ: தஞ்சோங் மாலிமில் உள்ள சிலிம் ரிவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் ஆக்ஸிஜன் தொட்டி தீப்பிடித்ததில் ஆண் நோயாளி ஒருவரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் நேற்று (ஆகஸ்டு 10) இரவு 7.42 மணிக்கு அழைப்பைப் பெற்றவுடன், சிலிம் ரிவர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறினார்.
செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, அறையில் இருந்த 48 வயது நோயாளியின் கையில் 9% தீக்காயங்கள் ஏற்பட்டன என்று தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த, தீயணைப்பு வீரர்கள் குழு மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைத்ததை கண்டறிந்தனர் என்றும் குறித்த தனிமைப்படுத்தப்பட்ட அறை 5% சேதமடைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் சம்பவ இடத்தைப் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு முழுமையான மதிப்பீடு மற்றும் பரிசோதனையை நடத்தியது. மேலும் மீட்பு நடவடிக்கை இரவு 8.55 மணிக்கு முடிந்தது என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
– பெர்னாமா