நிர்வாணமாக மோட்டார் வண்டி ஓட்டிய ஆடவரின் காணொளியை அவரது குடும்ப கெளரவத்தை கருத்தில் கொண்டு, யாரும் பகிர வேண்டாம்; போலீஸ் அறிவுறுத்தல்

புக்கிட் மெர்தாஜாம்: நிர்வாணமான தனது மோட்டார் வண்டியை ஜாலான் முத்து பழனியப்பனில் ஓட்டிச் சென்ற ஆடவரை போலீஸ் கைது செய்து, அவரை மேலதிக நடவடிக்கைகளுக்காக செபராங் ஜெயா மருத்துவமனையின் மனநல பிரிவில் ஒப்படைத்துள்ளனர்.

29 வினாடிகள் கொண்ட காட்சிகள் கொண்ட காணொளி ஒன்று, நேற்று இரவு 8.07 மணியளவில் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டது.

செபெராங் பிராய் தெங்கா மாவட்ட காவல்துறை துணை ஆணையர் ஷாபி அப்துல் சமத் இச்சம்பவம் பற்றி கூறிய போது, ஆரம்ப கட்ட விசாரணையில் அந்த நபர் சமீபத்தில் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது என்றார்.

“அந்த ஆடவர் அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பதை காண முடிந்தது” என்றும் “நாங்கள் அவரை மேலதிக நடவடிக்கைகளுக்காக செபராங் ஜெயா மருத்துவமனையின் மனநல பிரிவுக்கு பரிந்துரைத்தோம்,” என்றும் அவர் இன்று கூறினார்.

மேலும் அவரது குடும்பத்தின் கெளரவத்தையும் மரியாதையையும் கருத்தில் கொண்டு, குறித்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here