கோலாலம்பூர்: பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு எதிராக, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்குமாறு பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ கவுன்சில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
PKR கட்சி தலைவர் அன்வார், பார்டி அமானா நெகாரா தலைவர் முகமட் சாபு மற்றும் DAP பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இக் கவுன்சில், நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்து புதிய பெரும்பான்மையை உருவாக்க எம்.பி.க்களை உடனடியாக சந்தித்து பேசுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வேட்பாளராக அன்வாருக்கு ஆதரவளிப்பதில் அதன் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய கவுன்சில், தற்போதைய 14 வது நாடாளுமன்றத்தின் காலம் ஜூலை 16, 2023 இல் முடிவடைவதற்கு முன்னர், கோவிட் -19 தொற்று நோய்க்கும் இடையில் எந்தவொரு பொதுத் தேர்தலையும் நடத்துவதில் தமக்கு உடன்பாடில்லை என்று கூறியது.
எனவே, முஹிடினுக்கு எதிரான அனைத்து எம்.பி.க்களையும் ஒன்றிணைத்து, நாடாளுமன்றத்தில் புதிய பெரும்பான்மையை நிரூபிக்க பிரதமர் வேட்பாளராக அன்வாரை ஆதரிக்குமாறு தலைமைத்துவ கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.
“மக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்காக, நடப்பு பிரதமர் முஹிடினுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தைக்காக ஒன்று கூட வேண்டும் என்று அது குறிப்பிட்டது.
“எனவே, பிரதமருக்கான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான நேரம் வரும்போது பெரிக்காதான் நேஷனல் அரசாங்கத்தின் அனைத்து தவறுகளையும் தோல்விகளையும் சரிசெய்யக்கூடிய அரசாங்கத்தின் கீழ் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது முக்கியம்.
“அரசு சீர்திருத்தங்கள் நிறுவன சீர்திருத்தங்கள், நல்லாட்சி மற்றும் சுயாதீன நீதித்துறை போன்ற கொள்கைகளை ஏற்றுக்கொண்ட கட்சிகளிடையே மட்டுமே இப்பேச்சு வார்த்தை நடக்கும்” என்று சபை வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 13) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசியல் நெருக்கடி விரைவில் முடிவுக்கு வரும் என்றும், கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிக்கவும், பொருளாதார மீட்சியை ஊக்குவிக்கவும் திறமையான தலைமையை உருவாக்கும் நோக்கில் இந்த அழைப்பை கவுன்சில் விடுத்துள்ளது.
மேலும் 100 எம்.பிக்கள் மட்டுமே முஹிடினை பிரதமராக ஆதரித்தனர் மற்றும் 120 பேர் அவருக்கு எதிராக இருந்தனர் என்பது தெரிந்திருந்தும், முஹிடின் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவும் ராஜினாமா செய்வதையும் ஏற்கவும் மறுத்துவிட்டார்.
“தினசரி 20,000 க்கும் அதிகமான கோவிட் -19 தொற்றுக்கள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தீவிர சிகிச்சையில் இருக்கும் நேரத்தில், ஒவ்வொரு நாளும், கோவிட் -19 காரணமாக வேலையின்மை மற்றும் வருமான இழப்பு ஆகியவற்றுடன் நூற்றுக்கணக்கான இறப்புகளை நாங்கள் காண்கிறோம். எனவே எம்பிக்களின் சட்டபூர்வமான மற்றும் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட ஒரு பிரதமர் தலைமையிலான ஒரு நிலையான மற்றும் திறமையான அரசாங்கம் நாட்டிற்கு முக்கியமாக தேவை என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்