சூதாட்ட மையத்தில் சோதனை: 5 உள்நாட்டினர்- 3 வெளிநாட்டினர் என 8 பேர் கைது

கோலாலம்பூர்: ஜாலான் புடுவிற்கு அருகிலுள்ள  ஜாலான் லேண்டாக்கில் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட மையத்தில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையின் போது 24 முதல் 70 வயதுக்குட்பட்ட ஐந்து உள்ளூர்வாசிகள் மற்றும் மூன்று வெளிநாட்டவர்கள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி OCPD உதவி  ஆணையர் டெல்ஹான் யஹாயா கூறினார்.

12 மடிக்கணினிகள், மூன்று மொபைல் போன்கள் மற்றும்  ஒரு மோடம் உள்ளிட்ட பொருட்களை நாங்கள் கைப்பற்றினோம். ஆரம்ப விசாரணைகளில் ஐந்து உள்ளூர் ஆண்கள் சூதாட்டக்காரர்கள் மற்றும் மூன்று வெளிநாட்டவர்கள் சூதாட்ட மையத்தின் தொழிலாளர்கள் என்று தெரியவந்தது என்று அவர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) தொடர்பு கொண்டபோது கூறினார்.

ஏசிபி நூட் டெல்ஹான் கும்பல் குறித்து போலீசார் மேலும் விசாரிப்பார்கள் என்றார். ஏதேனும் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கை பற்றிய தகவல் உள்ளவர்கள் Dang Wangi காவல் தலைமையகத்தை 03-2600 2222 அல்லது KL போலீஸ் ஹாட்லைனை 03-2115 9999 அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here