கோலாலம்பூர்: நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 31.1% அல்லது 10,144,199 பேர் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் நேற்று (ஆகஸ்டு 13) வரையுள்ள தரவுகளின் அடிப்படையில் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா இன்று தெரிவித்தார்.
நேற்று (ஆகஸ்டு 13) 462,860 டோஸ் வழங்கப்பட்டது என்றும் முதல் டோஸ் 162,182 பேருக்கும் மற்றும் இரண்டாவது டோஸ் 300,678 பேருக்கும் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவில் தெரிவித்தார்.
நேற்றைய நிலவரப்படி, முதல் டோஸ் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,707,566 ஆக இருந்தது, அதே நேரத்தில் தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் (PICK) இன் கீழ் இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,851,765 என்றும் தெரிவித்தார்.
நாட்டின் வயது வந்தவர்கள் (adults) 71.4 விழுக்காட்டினர் தங்களது முதல் டோஸைப் பெற்றுள்ளதாகவும், 43.3 விழுக்காட்டினர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளதாக டாக்டர் ஆதாம் கூறினார்.
மேலும் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த PICK அமைப்பு பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
























