மலேசிய தேசிய பள்ளிவாசலின் இமாம் இதய நோயினால் மரணம்

கோலாலம்பூர்: நாட்டின் தேசிய பள்ளிவாசலில் இமாம் ஹிசாமுடின் இஸ்மாயில் இன்று அதிகாலை 4 மணியளவில் சிலாங்கூர், பத்து ஆராங்கில் உள்ள கோத்தா புத்ரியில் உள்ள அவரது இல்லத்தில் இதய நோய்காரணமாக இறந்தார். அவருக்கு இன்று 53 வயதாகிறது.

அவர் மறைந்த செய்தியை தேசிய பள்ளிவாசல் தனது முகநூல் பதிவினூடாக இரங்கலை தெரிவித்திருந்தது.

“காலஞ்சென்ற இமாம் அவருடைய கடமையில் அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு நண்பர், மேலும் ஒரு இமாம் மற்றும் நல்ல ஒரு ஆசிரியரை நாங்கள் இழந்துவிட்டோம். அல்லாஹ் அவருடைய ஆன்மா மீது இரக்கத்தையும் மன்னிப்பையும் வழங்கி, அவரை நேர்மையாளர்களிடையே வைப்பானாக “ என்று அப்பதிவில் தெரிவித்திருந்தது.

“அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்த சோதனையை எதிர்கொள்ள பொறுமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்” என்றும் மரணமடைந்த இமாமின் உடல் இன்று காலை 9.30 மணியளவில் பத்து ஆராங் இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தேசிய பள்ளிவாசலின் உதவி தகவல் அலுவலர் அஹமட் ஃபைஷால் அஸ்மான் தெரிவித்தார்.

ஹிசாமுடின் ஏப்ரல் 2014 இல் தேசிய பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றத் தொடங்கினார், அதற்கிடையில் ஏப்ரல் 2018 இல் தேசிய பொது நிர்வாக நிறுவனம் (INTAN) புக்கிட் கியாராவில் பயிற்றுவிப்பாளராக இருந்து, மீண்டும் அதே ஆண்டு ஜூன் மறுபடியும் தேசிய பள்ளிவாசலுக்கே இமாமாக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், பிரதம மந்திரி துறை (மத விவகாரங்கள்) அமைச்சர் டத்தோ டாக்டர் சுல்கிஃப்லி முகமட் அல்-பக்ரியும் ஹிசாமுடினின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

மேலும் சமூக ஊடகங்களில் இமாமின் நண்பர்கள் மற்றும் இஸ்லாமிய அன்பர்களும் இரங்கல்களையும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here