இன்று (ஆகஸ்டு 18) ஸ்கூடாய்க்கு செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 9.7 இல் நடந்த சாலை விபத்து சம்பவத்தில் KKM ஆம்புலன்ஸ் ஒன்று, லோரியின் பின்புறத்தில் மோதியதில் சுகாதார அமைச்சின் (MOH) ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இன்று நண்பகல் 12.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், 49 வயதான ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் உடல் சிதைவடைந்த ஆம்புலன்ஸின் பாகங்களில் சிக்கியதுடன் அவர் பலத்த காயமடைந்திருந்ததால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆம்புலன்ஸ் குளுவாங் மாவட்ட சுகாதார மையத்தில் இருந்து இங்குள்ள பெர்மாய் மருத்துவமனையில் தடுப்பூசி எடுக்கச் சென்றுகொண்டிருந்த போதே இத்துயரசம்பவம் நடந்ததாக கூறப்படுகின்றது.
மேலும் ஆம்புலன்ஸின் முன்னிருக்கையில் இருந்தவர் விபத்தில் படுகாயமடைந்துள்ளார். அத்தோடு இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.