கோலாலம்பூர்: கடந்த ஜூலை மாதம் முதல் சிலாங்கூரில் மொத்தம் 53,571 தொழிலாளர்களுக்கு கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளது.
சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி இது தொடர்பில் கருத்துரைத்த போது, பணியிடத்திற்குள் நுழைவதற்கு முன் தொழிலாளர்களுக்கு செய்யப்படும் ஸ்கிரீனிங்கில் நேர்மறை பதிலை பெற்றவர்கள், நேர்மறை பதில் பெற்ற ஊழியர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர்களும் அல்லது தனியார் சுகாதார வசதிகளில் உள்ள ஊழியர்களால் சுய -ஸ்கிரீனிங் செய்யப்பட்டவர்களும் இதனுள் அடங்குவர் என்றார்.
கோவிட்-19 தொற்றுக்குள்ளான தொழிலாளர்களில் மொத்தமாக 62 விழுக்காடு அல்லது 33,214 தொழிலாளர்கள் உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் தொடர்ந்து 14.5 விழுக்காடு அல்லது 7,768 தொழிலாளர்கள் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள், 13.5 விழுக்காடு அல்லது 7,232 தொழிலாளர்கள் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் 10 விழுக்காடு அல்லது 5,357 தொழிலாளர்கள் வர்த்தகத் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
“ஏறக்குறைய, சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்ட தொற்றுக்களில் 17.1 விழுக்காடு (கடந்த ஜூலை முதல் இப்போது வரை 313,075 தொற்றுக்கள்) தொழில்துறை தொழிலாளர்கள்” என்று மாநில சட்டசபையில் (DUN) அஹமட் யூனுஸ் ஹைரியின் (PAS-Sijangkang) கேள்விக்கு பதிலளித்தார்.
இதற்கிடையில், சிலாங்கூர் சுகாதாரத் துறையால் ஜூலை 13 முதல் ஆகஸ்டு 23 வரை ஆய்வு செய்யப்பட்ட 220 தொழிற்சாலைகளில் 79 தொழிற்சாலைகள் 3 அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங்களைச் செய்ததற்காக தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1988 இன் பிரிவு 18 (1) (f) ன் கீழ் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் “ஏழு நாட்களுக்கு தொழிற்சாலையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் பணி அறிவுறுத்தல்கள் மற்றும் கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த முன்னேற்றமான செயல்பாடுகளை மூடப்பட்ட காலத்தில் முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் உற்பத்தித் துறை தொழிற்சாலையில் SOP களில் மூன்றுக்கும் குறைவான குற்றங்களை மீறியதற்காக மேலும் 42 தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.























